வேலூருக்கு வந்த அயலகத் தமிழர்கள்!

வேலூருக்கு வந்த அயலகத் தமிழர்கள்!
X
வேலூருக்கு வந்த அயலகத் தமிழர்களுக்கு ஆட்சியர் வரவேற்பு அளித்தார்.
'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் 13 நாடுகளில் இருந்து வந்த 100 அயலகத் தமிழர்கள் வேலூர் கோட்டையும் அரசு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். ஆஸ்திரேலியா, பிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மார்டினிக், மோரிஷஸ், மலேஷியா, தென்ஆப்பிரிக்கா, மியான்மர், குவாடலூப், கனடா, இலங்கை, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்த இளைஞர்களை மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
Next Story