மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மேலூர் பள்ளி மாணவிகள்.

மாநில சதுரங்க போட்டிக்கு மேலூர் அரசு பள்ளி மாணவிகள் தகுதி பெற்றனர்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளி மாணவர்களும் விளையாடினர். இதில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி இ.இஸ்பா டுஜானா முதலிடமும், அதே வகுப்பில் பயிலும் மாணவி S.யாகஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனர். இப்பள்ளிக்கு அருகே உள்ள அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அ. தமிழரசி இரண்டாம் இடமும், அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் மோ.சந்தோஷ் 17 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடமும், அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி அ.சோலையம்மாள் மூன்றாம் இடமும் பெற்றனர். இவர்கள் வரும் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இவர்களை கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் பாராட்டினார்கள்.
Next Story