புனித ஆரோக்கிய மாதா கலைக் கல்லூரி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணி கல்லூரியில் தொடங்கி வேளாங்கண்ணி பேருந்து நிலையம் வந்தடைந்தது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, கல்லூரி நிர்வாக தந்தை ஆதி.ஆரோக்கிய சாமி தலைமை வகித்தார். பேரணியை, பேரூராட்சி தலைவர் ஏ.டயானா சர்மிளா மற்றும் துணை தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் தொடங்கி, கடற்கரை சாலை முதல் முக்கிய வீதி வழியாக வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. முன்னதாக, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர். பேரணியில், புனித ஆரோக்கிய மாதா கலைக் கல்லூரி முதல்வர் ஆர்.பிரின்ஸ், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய.சார்லஸ், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்,பேரூராட்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சந்துரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மோகன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில், புனித ஆரோக்கிய மாதா கலைக் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story