கோவை: பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

X
பொள்ளாச்சி நகரில் அதிக வரி சுமை, பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறாதது, சாலைகள் பராமரிப்பு இல்லாமை, குடிநீர் வசதி குறைவு, குப்பை மேலாண்மை சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து அதிமுக, பாஜக, தமிழ்நாடு காங்கிரஸ், குடியிருப்பு நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்டோர் இணைந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர்மன்றம் பழைய பேருந்து நிலையத்தை உடனடியாக சீரமைத்து, பேருந்து போக்குவரத்துக்கு வசதிகள் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியை விட பலமடங்கு ஊழல் பொள்ளாச்சியில் நடப்பதாகவும், நிதி நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
Next Story

