வெறிநாய் கடித்து மூன்று வயது சிறுவன் படுகாயம்

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மண்டு கோவில் தெருவில் வசிக்கும் ராஜ்குமார் நீலம்மாள் தம்பதியரின் மகனான கருண்ராஜ் என்ற 3 வயது சிறுவனை நேற்று (ஆக.13)வெறிநாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த காரணராஜ் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் இருந்த கரன்ராஜை தெருவில் திரிந்த வெறிநாய் வீட்டிற்குள் புகுந்து கரன்ராஜின் கண் மூக்கு பகுதிகளில் கடித்துக் குதறி இருப்பதாக தெரிகிறது. தெருவில் ஓடிய வெறிநாய் அருகில் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் ஒருவரை கடித்து குதறியதாக தெரிகிறது. இதனால் சிறு குழந்தைகளை வைத்திருக்கும். பெற்றோர்கள் வீட்டிற்குள் தொட்டிலில் குழந்தைகளை போட்டுவிட்டு கதவை பூட்டி வெளியில் காவல் காத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

