டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி.

டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி.
X
மதுரை திருப்பரங்குன்றம் அருகே டூவீலரில் சென்ற பெண் தவறி விழுந்ததில் பலியானார்
மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரி ரோடு பெத்தானி நகரை சேர்ந்த செல்லையா மனைவி கிறிஸ்டி எலிசபெத் (60). இந்த தம்பதியர் பசுமலை நடந்த ஆலய ஆராதனை நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்தனர். கணவர் டூவீலர் ஓட்ட மனைவி பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். இவர்கள் ராயப்பன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்த மனைவி நான் கொண்டு வந்திருந்த குப்பை பையை தூக்கி வீசி எறிந்தபோது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்ததால் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story