சேலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகள் மூடப்படுகின்றன

சேலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகள் மூடப்படுகின்றன
X
கலெக்டர் பிருந்தாதேவி தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நாளை (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மூடப்பட வேண்டும். மேலும் உரிமம் பெற்ற கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்களும் மூட வேண்டும். உத்தரவுகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story