கோவை: சுதந்திர தினம் - ரயில் நிலையத்தில் காவல்துறை சோதனை !

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனைகள் நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்பநாய்கள் மற்றும் நவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
நாளை கொண்டாடப்படும் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனைகள் நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்பநாய்கள் மற்றும் நவீன கருவிகளுடன் பயணிகள் உடைமைகள், நடைமேடைகள், தண்டவாளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகப்படும் நபர்கள் மற்றும் சரக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, சுதந்திர தினம் வரை கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story