கோவை: சூலூரில் சமரசத் தீர்வு விழிப்புணர்வு முகாம் !

கோவை மாவட்ட சமரசத் தீர்வு மையம் சார்பில், சூலூர் நீதிமன்றத்தில் சிறப்பு சமரசத் தீர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கோவை மாவட்ட சமரசத் தீர்வு மையம் சார்பில், சூலூர் நீதிமன்றத்தில் நேற்று சிறப்பு சமரசத் தீர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சூலூர் குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சமரசத் தீர்வு மையத் தலைவர் அருண்குமார் தலைமையில, மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தோஷம், உறுப்பினர்கள் கவின் பாரதி, வழக்கறிஞர்கள் விஜயகுமார், தமிழ்ச்செல்வி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், சமரசத் தீர்வு மையத்தின் பயன்கள் விளக்கப்பட்டன. வழக்குகளை இருதரப்பினரும் பேசி சமரசம் செய்வதன் மூலம் விரைவில் தீர்க்க முடியும் என்றும், நீதிமன்ற கட்டணத் தொகையை மீண்டும் பெறலாம் என்றும் கூறப்பட்டது. குடும்ப, காசோலை, பாகப்பிரிவினை, வணிக, விபத்து இழப்பீடு, ஆக்கிரமிப்பு, வங்கிக் கடன், குத்தகை, தொழிலாளர் வழக்குகள் உள்ளிட்டவை இம்மையம் மூலம் தீர்க்கப்படும். முகாம் செப்டம்பர் 30, 2025 வரை நடைபெறும்.
Next Story