ராமநாதபுரம் உயிர்ம வேளாண்மை வழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது

உயிர்ம வேளாண்மை வழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை வழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்களை சட்டப்பேரவை உறுப்பினர் செ.முருகேசன் தொடங்கி வைத்தார். விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக திராவிடமாடல் அரசு உள்ளது. என்றென்றும் விவசாயிகள் அரசுக்குக்கு துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ராமநாதபுரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை-வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை வழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தனியார் மகாலில் வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கர மணியன் தலைமையில் நடைபெற்றது. இம் முகாமை பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் செ.முருகேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை காக்கும் விதமாக வேளாண்மைத்துறை பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும் கருத்துக்களை உள்வாங்கி விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும். விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக திராவிடமாடல் அரசு உள்ளது. என்றென்றும் விவசாயிகள் அரசுக்குக்கு துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கில், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் வாசுகி,அமர்லால், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம்,விதை ஆய்வு துணை இயக்குநர் இபுராம்சா,வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் முத்துக்குமார், விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா ஆகியோர் சிறப்புரையாற்றினார். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன்,வேளாண் வணிகம் துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், விதை மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குநர் சிவகாமி மற்றும் ஏராமளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Next Story