ஈசூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், எம்எல்ஏ பங்கேற்பு

X
ஈசூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈசூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, ஒன்றிய கழக செயலாளர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் ஏஏராளமானபொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சாந்தி ரவிக்குமார், பிரேமாசங்கர் விசிக ஒன்றிய செயலாளர் புகழேந்தி, உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

