படாளம்- புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

படாளம்- புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு
X
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம்- புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம்- புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டம், படாளம் மற்றும் புக்கத்துறை கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதனால் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி ஒன்று சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் நள்ளிரவு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் திருச்சி சென்னை மார்க்கத்தில் திருச்சி சென்னை மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தப்பட்ட நிலையிலும் மாமண்டூர் முதல் படாளம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் காலையில் பணிக்கு செல்வோர் மருத்துவமனைக்கு செல்வோர் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
Next Story