டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி.

டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி.
X
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி (கலை
நிகழ்ச்சியினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சுமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஊடகவியலாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலைமாமணி விருதாளருமான ஆண்டாள் பிரியதர்ஷினி "உழைப்பவருக்கு உரியது உலகு" என்ற தலைப்பில் பேசினார். மூடநம்பிக்கைகள் நம் வளர்ச்சிக்கு எதிரானவை. நம் விதியினை நாம் தான் எழுத வேண்டும். அறிவியல் முன்னேற்றமே நமது வளர்ச்சிக்கான ஆதாரம். புத்தி உள்ளோர் மட்டுமே நன்கு பிழைப்பார்கள் என்றார். தலைவிதியை நம்பாமல் மதியை நம்புபவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பு ஒன்றே உங்களை உயர்த்தும் என்றார் அவர் இந்நிகழ்வில். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக அலுவலர் டி. காயத்ரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பி. எம். ஷீலா, நாமக்கல் - மகளிர் சுய உதவிக் குழு மகளிர் திட்ட இயக்குநர் கே. செல்வராசு, கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், நாமக்கல் - என்.கே.ஆர். அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) எஸ். அலெக்சாண்டர் உட்பட இக்கல்லூரிகளின் மாணவியர், நாமக்கல் - அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம் - திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, சேந்தமங்கலம் - அரசு கலைக் கல்லூரி, நாமக்கல் - அரசு சட்டக் கல்லூரி, ப.வேலூர் - கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல் - செல்வம் கலைக் கல்லூரி, நாமக்கல் - பாவை மகளிர் கலைக் கல்லூரி மற்றும் நாமக்கல் - பிஜிபி கலைக் கல்லூரிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தியிருந்தனர். கல்லூரி பேராசிரிய பெருமக்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story