ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
பெரம்பலூர் நகரில் பட்ட பகலில் பள்ளிக் குழந்தைகளை அழைக்க சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை இரண்டு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் படுக்காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் இருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் அம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. வயது 40, இவர் பெரம்பலூர் நகரில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ள நிலையில் பெரம்பலூர் எடத் தெருவில் உள்ள மூன்றாவது மனைவி ஸ்வேதா வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் ரவி பெரம்பலூர் கடைவீதி பகுதியில் சிவன் கோயில் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை அழைப்பதற்காக தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி அருகே ஆட்டோவை வழிமறித்த இரண்டு பேர் கொண்ட கும்பல் ரவியை, தலை கழுத்து என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.அப்பகுதியில் குழந்தைகளை அழைப்பதற்கு வந்த பெற்றோர்கள் தலை தெறிக்க ஓடினர். இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் ரவி ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகளை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி சாலையில் ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக மர்ம கும்பல் ஒன்று வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story




