அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

X
Komarapalayam King 24x7 |14 Aug 2025 9:14 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நலமே வளம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் நலமே வளம் என்ற தலைப்பில், முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. . சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் வெஸ்லி பங்கேற்றார். இவர் உடல் நலம் பேணுதல் அவசியம், உணவு பழக்க வழக்க முறை, உடற்பயிற்சிகள், மனநலம் பேணுதல், போதை பழக்க வழக்கங்கள் தவிர்த்தல் போன்றவற்றை எடுத்துரைத்து சுற்றுச்சூழல் பாதுகாக்க நெகிழி பொருட்களை தவிர்த்து துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பல்வேறு துறையைச் சார்ந்த துறை தலைவர்கள் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திட்ட அலுவலர் கோவிந்தராஜு இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
Next Story
