கிருஷ்ணர் படம் போட்ட ஆடைகள் விற்பனை தீவிரம்

X
Komarapalayam King 24x7 |14 Aug 2025 9:15 PM ISTகுமாரபாளையத்தில் கோகுலாஷ்டமியையொட்டி குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களுக்கு கிருஷ்ணர் படம் போட்ட ஆடைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
ஆக. 16ல் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவில் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோயில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் கோகுலாஷ்டமி விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாக்களில் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கோவிலுக்கு அழைத்து வருவார்கள். கோலாட்டம் உள்ளிட்ட பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக நகரில் உள்ள பல ஜவுளிக்கடைகளில் கிருஷ்ணர் படம் போட்ட ஆடைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story
