நகர அனைத்து வணிகர்கள் சங்கம் கூட்டம்

X
Komarapalayam King 24x7 |14 Aug 2025 9:31 PM ISTகுமாரபாளையத்தில் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் கூட்டம் நடந்தது
குமாரபாளையம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் கூட்டம் ரெயின்போ மஹாலில் நடந்தது. கூட்டத்தில் ஆக. 31ல் குமாரபாளையம் வருகை தரும்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா வருகை குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குமாரபாளையம் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவராக காமராஜ் செயலாளராக விடியல் பிரகாஷ், பொருளாளராக செந்தில் துணைத் தலைவராக சேகர், சம்பத், பாலமுருகன், கோபாலகிருஷ்ணன், ஆகியோரும், உதவி செயலர்களாக சண்முகம், பிரபாகரன், பாலகிருஷ்ணன், மோகன், ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக டிஸ்கோ சம்பத், செந்தில் குமார், மதியழகன், செந்தில் குமார், சிவா, புஷ்பநாதன், கௌரிசங்கர், சக்திவேல், கார்த்தி, தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜாவை சிறப்பாக வரவேற்பது, சங்கப் பெயர் பலகையை விக்கிரமராஜாவால் திறந்து வைப்பது, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி, சங்க வளர்ச்சி குறித்து விவாதிப்பது, பொதுநல சேவைப்பணிகள் செய்வது, என்பது உள்ளிட்ட பல தீர்மனங்கள் நிறைவேற்றபட்டது. கோபிராவ் நன்றி கூறினார். இதில் உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
