காவல்த்துறையினர் கொடி அணிவகுப்பு....
சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைப்பெறுவதையொட்டி உதகையில் இன்று காவல்த்துறையினர் கொடி அணிவகுப்பு.... எவ்வித அசம்பாவிதங்களும் நடைப்பெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் தகவல்.... நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பதற்றமான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுதந்திர தின விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டத்தில் இருந்து 30 பேர் கொண்ட விரைவுப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சதுக்கம் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைந்தது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம் பதற்றம் நிறைந்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டத்திலிருந்து 30 பேர் கொண்ட இரண்டு விரைவு படை குழுவினர் வரவழைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர், தேவர் சோலை பகுதிகளில் கொடி அணி வகுப்பு நிறைவடைந்துள்ளதாகவும், அதேபோல் மசினகுடி, பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொடி அணி வகுப்பு நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது காவல்துறையினர் கூட்டத்தை எவ்வாறு கையாள்வது, உபகரணங்களை எவ்வாறு கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பேட்டி: என்.எஸ் நிஷா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
Next Story



