கூலி திரைப்படம் திரையிடப்பட உள்ள திரையரங்கில் கூட்டம் இன்றி வெருச்சோடி காணப்படும் திரையரங்கம்...
நீலகிரி கூலி திரைப்படம் திரையிடப்பட உள்ள திரையரங்கில் கூட்டம் இன்றி வெருச்சோடி காணப்படும் திரையரங்கம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் உலகம் முழுவதும் திரையிட ப்பட்டுள்ள நிலையில் உதகையில் திரையிடப்பட்ட திரையரங்கில் கூட்டமின்றி காணப்பட்டுள்ளது... உலகம் முழுவதும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைக் காண ரஜினி ரசிகர்கள் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. உதகையில் இந்த திரைப்படமானது கணபதி என்னும் திரையரங்கில் 11:30 மணிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திரையிடுவதற்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் திரைப்படத்தை காண கூட்டம் இன்றி திரையரங்குவளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரைப்பட வெளியிடை கொண்டாடும் ரஜினி ரசிகர்களே திரையரங்கு வளாகத்திற்குள் வராமல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 9 மணிக்கு முதல் காட்சி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உதகையில் 11:30 மணி காட்சி தான் வெளியிடப்படும் என தெரிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story



