பாஜக அரசின் ஓட்டுத்திருட்டை கண்டித்தும்,இதற்கு துணை போன தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

X
பாஜக அரசின் ஓட்டுத்திருட்டை கண்டித்தும்,இதற்கு துணை போன தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ...... பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோரை நீக்கிய சம்பவத்தை கண்டித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசின் ஓட்டு திருட்டை கண்டித்தும், இதற்கு துணைப் போன இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் பல்வேறு கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் , அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, பாஜக அரசின் ஓட்டு திருட்டை கண்டித்தும் இதற்கு துணை போன இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், மோடியை பதிவு விலக கோரியும் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் , பெரம்பலூர் நகர தலைவர் சேட்டு என்கிற இப்ராஹிம், வட்டாரத் தலைவர்கள் பாக்கியராஜ், நல்லுசாமி, செந்தமிழ் செல்வன், செந்தில், சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் பன்னீர்செல்வம், ஆசைத்தம்பி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலமுருகன் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமது மீரான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

