பெரம்பலூர் எம்பி வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்

அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் எம் பி இடம் குற்றச்சாட்டு கேள்வி கேட்டால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டுகின்றனர்
பெரம்பலூர் எம்பி வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள் பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட சென்ற பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என். அருண்நேருவை முற்றுகையிட்ட பெண்கள் குடிநீர் மற்றும் சமுதாயக்கூடம் அமைத்து தர கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..... பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் விதமாக பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைப்பதற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட சென்ற நிலையில் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பாளையம் கிராமம் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை, சமுதாயக்கூடம், குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை என்றும் இது குறித்து நாங்கள் போராட முயற்சித்தால் போலீசார் எங்களை மிரட்டுகின்றனர், மேலும் நான்கு பேரை கைது செய்து அழைத்தும் சென்றனர், என்று கூறினர். இதனை கேட்ட எம் பி அருண் நேரு இது தொடர்பாக விசாரித்து ஆட்சியருக்கு தகவல் கூறி உடனடியாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவரை பின்தொடர்ந்து வந்த பெண்கள் அவரின் காரின் அருகே நின்று நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். எப்பயாவது ஒரு தடவை தான் பெரம்பலூருக்கு வருகிறீர்கள் அப்போதாவது எங்கள் கோரிக்கையை கேட்க மாட்டீர்களா என பெண்கள் ஆபாசத்துடன் காரை பின் தொடர்ந்தன கண்டும் காணாமல் சென்ற எம் பி ஆல் பொதுமக்கள் வேதனை ,இருப்பினும் அவரது கார் வேகமாக புறப்பட்ட சென்று விட்டது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story