கரூர், நாமக்கல், சேலம் வழியாக திருநெல்வேலி - ஷிமோகா டவுன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்.
கரூர், நாமக்கல், சேலம் வழியாக திருநெல்வேலி - ஷிமோகா டவுன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம். ரயில் எண்.06103 திருநெல்வேலி - ஷிமோகா டவுன் சிறப்பு ரயில் 17.08.25 அன்று மாலை 4.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு ஷிமோகா டவுன் சென்றடையும். ரயில் எண்.06104 ஷிமோகா டவுன் - திருநெல்வேலி சிறப்பு ரயில் 18.08.2025 அன்று பிற்பகல் 2.20 மணிக்கு ஷிமோகா டவுனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். ரயில் பெட்டிகள் விவரம்- கலவை: ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள். நிறுத்தங்கள்: கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம், கிருஷ்ணராஜபுரம், பங்காரு குப்பம், பி.டி. தும்கூர், அர்சிகெரே, பிரூர், தரிகெரே மற்றும் பத்ராவதி என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story




