பத்திரகாளி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

பத்திரகாளி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா
X
பத்திரகாளி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா நடைபெற்றது
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், சுமங்கலி பூஜை, வளைகாப்பு, பின்னர் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குஞ்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டது.  தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.  விழாவில், கோவில் நிர்வாகிகள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், இருதயராஜ், காளி துரை, பட்டுராஜ், ரமேஷ், வைணவ பெருமாள், நட்ராஜ், முத்து உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story