பாரதிய ஸ்டேட் வங்கி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாரதிய ஸ்டேட் வங்கி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
கூட்டாலுமூடு
குமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்காப்பட்டணம் பாரதிய ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. வங்கி கிளை மேலாளர் ராதிகா தலைமை வகித்தார். கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன் , பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் விஜயராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வங்கியின் கோட்ட மேலாளர் பழனிசங்கர் வங்கியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். ஆன்லைன் மோசடியில் எப்படி விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து தகவல்கள் வழங்கப்பட்டது. 300க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
Next Story