குளச்சல் போர் ஸ்தூபி பிரின்ஸ் எம்எல்ஏ மரியாதை

X
குமரி மாவட்டம் குளச்சல் கடலில் 1741-ம் ஆண்டு டச்சுப்படையை எதிர்கொண்டு வீழ்த்திய வரலாற்று நாயகர்களின் நினைவாக எழுப்பப்பட்ட வெற்றித்தூண் முன்பாக அருட் பணியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் கூடி வீரவணக்கம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் குளச்சல் போர் பற்றிய வரலாற்றை வெளிக்கொண்டுவரவும், கேரள அரசு மாணவர்களுக்கு குளச்சல் போரின் முக்கியத்துவத்தை படிப்பிப்பதுபோல் தமிழ்நாடு அரசும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் ராணுவ மைதானத்திற்கே குளச்சல் மைதானம் என்று பெயர் வைத்திருப்பதை அறிந்தேன். இவ்வளவு சிறப்புவாய்ந்த குளச்சல் யுத்த வரலாறு நாட்டு மக்களுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தெரியவேண்டும். இங்கு இது சம்மந்தமான அருங்காட்சியகம் அமைக்கவும் வெற்றி வரலாற்றை ஆண்டுதோறும் கொண்டாடவும் வெற்றிச்சின்னம் இருக்கும் இடத்தை சீரமைத்து புராதன பழமைவாய்ந்த பகுதியாக மாற்றவும் என்னால் முடிந்த அத்தனையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். அதோடு இப்போரில் பல தியாகங்கள் செய்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தையே காப்பாற்றிய மீனவர்களின் தியாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. எனவே மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்க உறுதியேற்போம் என்று உங்கள் முன்பாக சபதம் ஏற்கிறேன் என்று பேசினார். நிறைவாக நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் நன்றி தெரிவித்தார்.
Next Story

