சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை

சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
X
உங்களுடன் ஸ்டாலின் முகாமில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலமோர் ஊராட்சிக்கு உட்பட்ட கீரிப்பாறை பகுதியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்  நடத்தப்பட்டது. இப்பகுதியில் உள்ள கீரிப்பாறை காரிமணி சாலை கடந்த 30 வருடமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சாலை பணிக்கு 2024 ஆம் ஆண்டு மாவட்ட பொறியாளரால் 6 கோடி60 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போதைய பொறியாளரால் அந்த மதிப்பீடு ரத்து செய்துவிட்டு சாலையை ஒட்டு போடும் பணிக்கு 65 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மலைவாழ் மக்கள் சாலையை செப்பனிட கேட்டு அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மேலும் இன்னும் 30 நாட்கள் சாலையை செப்பனிடா விட்டால் நாகர்கோவிலுள்ள அம்பேத்கார் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக தெரிவித்தனர்.
Next Story