தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக சென்ற பாஜகவினர்
மதுரை அவனியாபுரத்தில் பாஜக சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நேற்று (ஆக.14) மாலை நடைபெற்றது. இந்த ஊர்வலம் அவனியாபுரம் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்டு அவனியாபுரம் பேஞ நிலையம் வரை நடைபெற்றது . ஊர்வலத்திற்கு மண்டல தலைவர் கதிரேசன் தலைமையில், மாவட்ட தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து தனியார் மஹாலில் கூட்டம் நடைபெற்றது.
Next Story




