பத்திரிக்கையாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இன்று நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், பத்திரிக்கை துறையில் 25 ஆண்டுகளாக சிறந்த செய்தியாளராக பணிபுரிந்து, சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் ஆகியோர்.
Next Story









