சுதந்திர தினம் முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை !

ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து, தமிழக ரயில்வே துறை போலீசார் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து, தமிழக ரயில்வே துறை போலீசார் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர். நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு, சரிபார்ப்பு முடிந்த பின் அனுப்பி வைக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சுதந்திர தினம் நிறைவடையும் வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story