கோவை காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகருக்கு மத்திய அரசு பதக்கம் !

X
கோவை மாநகர ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்திரசேகர், சுதந்திர தின விழாவில் மத்திய அரசின் பதக்கம் பெற்றுக் கொண்டார். 1997-ல் காவல் உதவி ஆய்வாளராக சேவையில் சேர்ந்த அவர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் சென்னை வண்டலூர் காவல் உயர் பயிற்சியகத்தில் பணியாற்றியுள்ளார். 2019-ல் காவல் துணைக் கண்காணிப்பாளராக உயர்வு பெற்றார். தனது பணிக்காலத்தில், மலேசிய போலீசால் தேடப்பட்ட கொலை குற்றவாளி மைக்கேல் கைது, பிரபல கொலை வழக்கில் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கச் செய்தல், விபச்சார தடுப்பு நடவடிக்கையில் 46 பெண்கள் மீட்பு, 65 குற்றவாளிகள் கைது உள்ளிட்ட பல சாதனைகள் புரிந்துள்ளார். கொடநாடு வழக்கிலும் விசாரணைக் குழுவில் பணியாற்றிய சந்திரசேகர், நேர்மை மற்றும் சிறப்பான சேவைக்காக இவ்விருதைப் பெற்றார்.
Next Story

