சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் - பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் !

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் -  பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் !
X
சூலூரில் பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி உட்கோட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (22) என்பவரை சூலூர் காவல் நிலைய போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.vஅந்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர் பாலியல் குற்றவாளி என்பதன் அடிப்படையில் அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி போக்சோ வழக்கு குற்றவாளியான வசந்தகுமார் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
Next Story