அரவக்குறிச்சி-முருங்கை விலை சரிவால் வெறுங்கையை பிசையும் விவசாயிகள்.

அரவக்குறிச்சி-முருங்கை விலை சரிவால் வெறுங்கையை பிசையும் விவசாயிகள்.
அரவக்குறிச்சி-முருங்கை விலை சரிவால் வெறுங்கையை பிசையும் விவசாயிகள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கை விளைச்சல் குறைவாக இருந்ததால் ஒரு கிலோ முருங்கை 300 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மார்ச் மாதம் முதல் முருங்கை சீசன் தொடங்கியதால் உற்பத்தியும் அபரிமிதமாக பெருகியது. இதனால் கடும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது முருங்கை ஒரு கிலோ 5 முதல் 7 ரூபாய் மட்டுமே செல்வதால் முருங்கை விவசாயம் செய்த விவசாயிகள் செய்வது அறியாது வெறும் கையை பிசைந்து வருகின்றனர். .
Next Story