அழகர் கோவிலில் தேசிய கொடி ஏற்றிய எம் எல் ஏ

X
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அழகர் கோயில் அருள்மிகு சுந்தரராசா மேல்நிலைப்பள்ளியிலும், துவக்கப் பள்ளியிலும், மேலூர் ஊராட்சி ஒன்றிய அ.வலையபட்டி நடுநிலைப்பள்ளியிலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் தேசியகொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர் யக்ஞ் நாராயணன், கோவில் மேலாளர் வெ.பாலமுருகன், கல்வி குழு தலைவர் முத்துபொருள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் தனிக்கொடி, சுந்தரராசா பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் கு.ஜீவா, அ. வலையபட்டி தலைமை ஆசிரியர் தேவகி, அ.வலையபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே. வெள்ளைச்சாமி, அ.வல்லாளபட்டி முன்னாள் தலைவர் ம.செளந்தர்,ஊராட்சி செயலர் ரெகு மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், கிராம முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

