வெடிக்காரன்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு.

வெடிக்காரன்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு.
வெடிக்காரன்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு. நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. கரூர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் வாகனத்தை ஊராட்சி வெடிக்காரன் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதிக்கப்பட்டு , திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டிற்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துரைக்கப்பட்டு ஊராட்சிகளின் வரவு செலவு கணக்குகள் புதியதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
Next Story