கசிநாயக்கன் பாட்டி ஊராட்சியில்கிராம சபா கூட்டம் புறக்கணிப்பு

X
திருப்பத்தூர் மாவட்ட கசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு ஒரே மணி நேரத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தால் பரபரப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபா கூட்டத்தில் கசிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வக்கீல் ஐயர் தோப்பு குக்கிராமம் உள்ளது இந்தப்பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அத்திப்பட்டி திரைப்படத்தில் வருவது போல் இந்த வக்கீல் ஐயர் தோப்பு பகுதிகளுக்கு ஊராட்சி நிருவாகம் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்துதர பலமுறை கோரிக்கை வைத்தும் எங்கள் கிராமம் ஒதுக்கப்பட்டது போல் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எங்கள் பகுதிகளுக்கு கிராமசபா குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வருவாங்க அப்புறம் இந்த குக்கிராமத்தை மறந்து விடுவார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைத்து கிராமசபா கூட்டத்தை புறக்கணித்தனர் தகவலின் அடிப்படையில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவயிடத்திர்க்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story

