புளியங்குடியில் பேருந்தின் மீது பைக் மோதியதில் வாலிபர் உயிரிழப்பு

புளியங்குடியில் பேருந்தின் மீது பைக் மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
X
பேருந்தின் மீது பைக் மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி நேற்று இரவு சென்ற தனியார் பேருந்து முள்ளிக்குளம் விலக்கு பகுதியில் எதிரே வந்த பைக்குடன் நேருக்குநேர் மோதியது. இதில் பைக்கில் வந்த வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த சண்முகபாண்டியன்(25) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வாலிபர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story