மரணத்திலும் இணைபிரியாத தம்பதியினர்

X
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தில் மரணத்திலும் இணைபிரியாத தம்பதியினரின் மரணம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது... தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரத்தை சேர்ந்த பச்சப்பு தர்மராஜ்(83), தங்க புஷ்பம்(77) தம்பதியினருக்கு கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்ததுள்ளது. இவர்களுக்கு 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வரும் நிலையில் கணவன் மனைவி இருவரும் போலையர்புரத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்க புஷ்பத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்த நிலையில் இருந்ததனால் கவலையுற்ற பச்சப்பு தர்மராஜிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்க புஷ்பம் இன்று அதிகாலையில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு நல்லடக்கம் செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மேற்கொண்டு வந்த நிலையில் பச்சப்பு தர்மராஜிம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் மரணம் அடைந்திருப்பது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
Next Story

