ஜெயங்கொண்டம் அருள்மிகு கழுமலைநாதர் சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுவிருந்தில் எம்எல்ஏ பங்கேற்பு

X
அரியலூர், ஆக.15- ஜெயங்கொண்டம் அருள்மிகு கழுமலைநாதர் சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுவிருந்து நேற்று நடைபெற்றது. இந்த பொதுவிருந்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் வெ.கொ. கருணாநிதி, வார்டு கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம் பிள்ளை, நடராஜன்,துர்காஆனந்த் மற்றும் கழுமலைநாதர் கோயில் அறங்காவல் குழு தலைவர் குமார்,உறுப்பினர்கள் செந்தில்குமார், பேபி ஊர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த திருக்கோயில் செயல் அலுவலர் சிவநேயசெல்வன் மற்றும் கோயில் தக்கார் ஆய்வாளர் கேசவன் மற்றும் கோயில் கணக்கர் கந்தவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story

