அரசு பள்ளியில் மரம் நட்டு வைத்த மாவட்ட வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்

அரசு பள்ளியில் மரம் நட்டு வைத்த மாவட்ட வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்
X
கழுவந்தோண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுதந்திர தினத்தை ஒட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
ஜெயங்கொண்டம், ஆக.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திரதின விழா' மற்றும் மரம் நடும் விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோதண்டபாணி தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.முன்னதாக பள்ளி ஆசிரியர் செங்குட்டுவன் வரவேற்றார். மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாலிங்கம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சித்ரா, முன்னாள் மாணவர்கள் கொளஞ்சிநாதன், கண்ணன் மற்றும் பெற்றோர்கள், ஊர்முக்கியஸ்தர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.சுதந்திர தின விழாவை ஒட்டி மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியை சவேரியம்மாள் நன்றி கூறினார்.
Next Story