உடையார்பாளையம் அரசுமகளிர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி ஆய்வு பணியின் போது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசுப் பதக்கங்களை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர்

X
ஜெயங்கொண்டம் ஆக.15- உடையார் பாளையம் அரசுமகளிர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி ஆய்வு பணி நடைபெற்றது, ஆய்வில் அரியலூர் முதன்மைக்கல்வி அலுவலர்(பொ) பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தூய்மை, கழிவறை, குடிநீர்வசதிகள், வகுப்பறை கட்டிடவசதி, சுகாதாரமேம்பாடு, வகுப்பு கற்பித்தல் திறன்மேம்பாடு, மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான திறன்பயிற்சி மாணவர்களின் மதிப்பீடு, அலுவலகம் சார்ந்த கோப்புகள், ஆசிரியர்களின் திறத்தன்மைகளை ஆய்வு மேற்கொண்டார், தலைமையாசிரியரிடம் சென்ற கல்வியாண்டு போல இந்த ஆண்டும் நூறு சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார், மேலும் பள்ளி மாணவி கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சுவேதா, நுகர்வோர் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற சுவேதா, சுசி, எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட அளவில் வினாடி வினாப்போட்டியில் வெற்றிபெற்று தலா ஆயிரம்பரிசு பெற்ற சோபியா, பத்மப்பிரியா, சதுரங்கப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற சிம்மவாஹினியையும் பாராட்டி வாழ்த்தி பரிசுவழங்கினார், ஆய்வில் அரியலூர் மகளிர் பள்ளி தலைமையாசிரியர் உமா, அரியலூர் மாவட்ட கல்வி ஆய்வாளர் செல்வக்குமார் உடன் ஆய்வு செய்தனர், நிழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் சாந்தி,மஞ்சுளா, பூசுந்தரி, தமிழரசி, சுரும்பார்குழுலி, கவிதா, மாரியம்மாள், பாவைசங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்ஷாயின்ஷா, மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

