சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

X
கன்னியாகுமரி மாவட்டம் சுருளேகோடு பகுதியில் செயல்படும் தனியார் லேட்டக்ஸ் ரப்பர் தொழிற் கூட நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பஞ்சப்படி மற்றும் போனஸ் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழில் கூடம் முன்பு கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் தொடர் சத்யாகிரகப் போராட்டம் சி ஐ டி யு தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த தொழிலாளர்கள் தினமும் காலை முதல் மாலை வரை அங்கு கஞ்சி காய்ச்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட தொழிலாளர் துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுதந்திர நாளான இன்று 32வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்னையன் தலைமை வகித்தார். போராட்டத்தை குமரி மாவட்ட சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வல்சகுமார் துவக்கி வைத்து பேசினார். சங்கத் தலைவர் நடராஜன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தை அனைத்து கட்சியினர் வாழ்த்தி பேசினார்கள்.
Next Story

