உதகையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொட்டும் மழையிலும் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது......
நீலகிரி உதகையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொட்டும் மழையிலும் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது................... இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்ட்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடியேற்றி காவல்துறையினர் மற்றும் என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் 19 பயனாளிகளுக்கு 35 லட்சத்து 16 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். மேலும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து பழங்குடியின மக்களான கோத்தர், தோடர் இன மக்கள் அவர்களின் கலாச்சார உடை அணிந்து கொட்டும் மழையிலும் நடனம் ஆடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மலை மாவட்டம் என்பதால் காலை 10.00 மணிக்கு தேசிய கொடி ஏற்றுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story



