பணிக் குறிப்பு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தலைகீழாக ஏற்றப்பட்டுள்ள தேசியக் கொடியின் புகைப்படம் மற்றும் வீடியோ வைரல்*

X
பணிக் குறிப்பு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தலைகீழாக ஏற்றப்பட்டுள்ள தேசியக் கொடியின் புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பணிக்குறிப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளி கட்டிட வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சுதந்திர தின கொண்டாட்டம் பணி குறிப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பள்ளியின் சார்பில் நடைபெற்றது இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வ கனி தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார் இதை தொடர்ந்து அந்த ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தலைகீழாக கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடியின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
Next Story

