சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது

சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது
X
சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது
விருதுநகர் தேவாங்கர் மகாசபை பாத்தியப்பட்ட சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், ஸ்தாபன காமராஜர் பக்தர்கள் ஆலமரம் அமைப்பு விருதுநகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து 79 வது சுதந்திர தினத்தில் 105 மரக்கன்றுகள் நடும் 234 வது வார நிகழ்வு அல்லம்பட்டி எம் ஜி ஆர் நகர் சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தேவாங்கர் மகாசபை தலைவர், செயலாளர் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆலமரம் அமைப்பின் தலைவர் ஆலமரம் த வேலுச்சாமி அவர்களுக்கு மரியாதை செய்தனர். இதே பள்ளி வளாகத்தில் கடந்த இருமுறை 100 மரக்கன்றுகள் நட பட்டது. இதுவரை மொத்தம் 7555 மரக்கன்றுகள் 2100 பனைமரம் விதைகள் நடப்பட்டு முறையாக பராமரித்து வருகிறது ஆலமரம் அமைப்பு விருதுநகர்.
Next Story