மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம்..

மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம்..
X
மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம்..
மல்லூர் வீ ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் 79வது சுதந்திர தினவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். காலை 9.30 மணியளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் அணிவகுப்புடன் பள்ளித்தாளாளர் செல்லமுத்து அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியின் கொடியினை பள்ளி முதல்வர் விஜயகுமார் ஏற்றினார். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கூட்டுப் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. நடுநிலைப்பள்ளி பயிலும் மாணவர்களின் நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பதினொன்றாம் வகுப்பு மாணவிகளின் பட்டிமன்ற உரை அனைவரிடமும் கருத்தாழத்தைக் கொண்டு சென்றது. பள்ளி முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு மாணவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக் கூறினார். மேலும் பள்ளி மாணவர்களின் கவிதை,உரை போன்றவை இந்நிகழ்ச்சிக்கு மேலும் அழகூட்டின. மாணவ மாணவிகளுக்கு பள்ளிச்செயலாளர் ராமச்சந்திரன் சுதந்திரதினம் வாழ்த்து கூறினார். பள்ளியின் துணை முதல்வர் மீரா மிஸ்ரா நன்றியுரை வழங்கினார். நிர்வாக அலுவலர் வினோத்குமார் இவ்விழாவினை ஏற்பாடு செய்தார்.
Next Story