தனியார் பள்ளியில் விடுதலை நாள் விழா கொடியேற்றம்.

X
Komarapalayam King 24x7 |15 Aug 2025 8:05 PM ISTகுமாரபாளையத்தில் தனியார் பள்ளியில் விடுதலை நாள் விழா கொடியேற்றம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை முனி ராஜா பதின்மப் பள்ளியில் விடுதலை நாள் விழா தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் எழுத்தாளர் ரமேஷ் குமார் அவர்கள் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கொடி அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் முனி ராஜா கல்வி குழுமங்களின் அறங்காவலர் அவர்கள் தலைமையேற்றார். தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அவர்கள் சுதந்திரத்தை பேணுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனி ராஜா இயன்முறை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்த, தாளாளர் ஜெயபிரகாஷ், இயக்குனர்கள் செல்வி ஸ்ரீ நித்யா, கரண் ராஜா, பள்ளி முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்துகள் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்க நேரு அன்னபூரணி மாற்றுத்திறனாளி பள்ளி முதல்வர் மகேந்திரன் நன்றி கூறினார்.
Next Story
