ஓசூர் அருகே மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள பேரிகை அடுத்த காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இ ந்த பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்தஉணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story

