காமராஜ் வித்யாலயாவில் சுதந்திர தின விழா

X
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா வில் சுதந்திர தின விழா மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் ராஜேந்திரன்ப தலைமை தாங்கினார். பள்ளியின் துணைத் தலைவர் பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ,நிர்வாகஅதிகாரி ஆர்.அஜித்ராஆகியோர்முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என் தலைவாய் சுந்தரம் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றினார். தொடர்ந்து பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பி சி அன்பழகன், வழக்கறிஞர் பார்த்தசாரதி,முன்னாள் பஞ்சாயத்துதலைவர் மதிவாணன், தாமரை தினேஷ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அம்பிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

