சோழங்குறிச்சி ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன்

சோழங்குறிச்சி ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன்
X
சோழங்குறிச்சி ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அரியலூர், ஆக.15- அரியலூர் மாவட்டம் சோழங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள சோழங்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி ஸ்ரீ பச்சையம்மன் முன்பு காப்பு கட்டி விழா தொடங்கியது. தினந்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பந்தலில் வீற்றிருந்தார். அம்மன் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்கூட்டத்தில் காப்பு கட்டி விரதம் இருந்து கங்கணம் கட்டிக் கொண்ட 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். செந்துறை சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை பார்த்தும் அருள்மிகு பச்சையம்மனை வழிபட்டு சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க இரும்புலிக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Next Story