பிரதமர் மோடி ஹிட்லரை போன்ற செயல்படுகிறார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பெரம்பலூரில் தகவல்.
பிரதமர் மோடி ஹிட்லரை போன்ற செயல்படுகிறார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பெரம்பலூரில் தகவல். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் அருகில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மூத்த தலைவரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான கே எஸ் அழகிரி, கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கும்போது, இந்தியா முழுவதும் மக்களுடைய எதிர்பார்ப்பு தேர்தல் ஆணையம் செய்திருக்கிற தவறான நடவடிக்கைகளை நாம் எவ்வாறு களைய போகிறோம் என்பது தான், உதாரணமாக தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை உடைத்து எறிந்து இருக்கிறது என்று சொன்னால் நம்முடைய அரசியல் சட்டம் என்னவாகும் நம்முடைய ஆட்சி முறை என்னவாகும் காலமெல்லாம் போராடி பெற்ற இந்த சுதந்திரம் என்னவாகும் என்ற கேள்வி. இந்திய மக்கள் மனதில் எழுந்திருக்கிறது ஒரே ஒரு உதாரணம் பீகாரில் 65 லட்சம் மக்களுக்கு வாக்குரிமை இல்லை என்று ஒரே இரவில் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டார் இது எப்படி நியாயமாகும் அவர்கள் இந்திய குடிமக்கள், சென்ற தேர்தலில் அவர்கள் வாக்களித்து இருக்கிறார்கள் அவர்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது அவர்களிடம் தேர்தல் வாக்காளர் எண் இருக்கிறது அவர்களிடம் ரேஷன் அட்டை இருக்கிறது அவருடைய சொந்த இருப்பிடத்திலேயே அவர்களுக்கு என்று ஒரு முகவரி இருக்கிறது சிலர் அரசாங்க உத்தியோகத்திலும் தனியார் உத்தியோகத்திலும் பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு போய் தேர்தலில் வாக்களிக்கிற உரிமை இல்லை என்று சொன்னால் ஓரிருவர் அல்ல ஒரு லட்சம் பேர் அல்ல 65 லட்சம் பேர்களுக்கு உரிமை இல்லை என்று சொன்னால் இந்த ஜனநாயகம் எங்கே போகிறது என்கிற அச்சம் எழுகிறது இதில் தேர்தல் ஆணையம் நீங்கள் எல்லாம் இந்திய குடிமக்கள் அல்ல உங்களுக்கு வாக்களிக்கிற உரிமை இல்லை என்று இப்பொழுது சொல்லி இருக்கிறார்கள் அடுத்ததாக வாக்களிக்கிற உரிமையே இல்லை என்றால் நீங்கள் தேசத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வார்கள் தேர்தல் ஆணையம் என்கின்ற முகமூடியை அணிந்து சொல்கிறார்கள் மோடி அதற்கு ஆதாரமாக இருக்கிறது இந்த சம்பவம் , வாக்களிக்கிற உரிமை குறித்து உச்ச நீதிமன்ற இந்த கேள்வியை கேட்ட பொழுது தேர்தல் ஆணையம் சொன்னது தாங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உச்சநீதிமன்றத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறது. இதைத்தான் ஹிட்லர் செய்தார் இப்பொழுது அதை மோடி செய்து வருகிறார் என தெரிவித்தார், ராகுல் காந்தி இதற்காகத்தான் போராடுகிறார், எடுத்துள்ளார், இந்தியா முழுவதும் அனைத்து ஜனநாயகவாதிகளும் ராகுல் காந்தியின் கருத்திற்கு பக்கபலமாக இருக்கின்றனர், இந்திய கூட்டனி இதில் உறுதியாக இருக்கிறது, பீகாரில் பேரணி நடத்த முன் வந்திருக்கிறார்கள் இந்த ஜனநாயக விரோத சக்திகளை தூக்கி எறிவோம் என்று தெரிவிப்பதாக பேசினார். சென்னையில் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் விசிக தலைவர் திருமாவளவன் கூறியது போன்று ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் அவர்கள் கேட்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றி அவர்களுக்கு பயன்களை வழங்க வேண்டும் என்றும் இதைத்தான் காங்கிரஸ் ஆதரிக்கிறது எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனின் சின்னம்மா (செல்லம்மாள்)அவர்களை நேரில் சந்தித்து பின் அவரது உறவினர்களிடம், மருத்துவரிடம் நலம் விசாரித்தார். என்பது குறிப்பிடதக்கது.
Next Story



